ETV Bharat / bharat

புதுச்சேரியில் தியாகிகள் தினம் அனுசரிப்பு!

புதுச்சேரி: தொழிலாளர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், இன்று தொழிலாளர்களின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

author img

By

Published : Jul 30, 2020, 3:37 PM IST

 labours Martyrs Day observance in Pondicherry

பிரெஞ்சு ஆட்சியில், புதுச்சேரியில் எட்டு மணி நேர வேலைக்கோரி போராடிய, பஞ்சாலைத் தொழிலாளர்கள் மீது 1936-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் நாள் பிரெஞ்சு ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில் 12 பஞ்சாலைத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உரிமைப் போரில் உயர்நீத்த தொழிலாளர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 30-ஆம் தேதியை தியாகிகள் தினமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதன்படி இன்று (ஜூலை30) தியாகிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. புதுச்சேரி-கடலூர் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், பல்வேறு தொழிற்சங்கத்தினரும் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.