ETV Bharat / bharat

பேருந்தில் பயணம்செய்த அமைச்சர்: விமர்சித்த கிரண்பேடி!

புதுச்சேரி: அரசு அமுதசுரபி பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் அமைச்சர் காருக்கு எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்ததால் அரசுப் பேருந்தில் பயணம்செய்துள்ளார். இது குறித்து, தனது வலைதள பக்கத்தில் கிரண்பேடி விமர்சித்துள்ளார்.

கல்வித் துறை அமைச்சரை விமர்சித்த கிரண்பேடி
கல்வித் துறை அமைச்சரை விமர்சித்த கிரண்பேடி
author img

By

Published : Jan 4, 2020, 10:04 AM IST

புதுச்சேரியில் அரசு அமுதசுரபி பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் அமைச்சர்களின் கார்களுக்கு கடனில் எரிபொருள் நிரப்புவது வழக்கம். ஆனால், இதன் கடன் பாக்கி மட்டும் இரண்டு கோடியே 30 லட்ச ரூபாயாகும். இதனால் அமைச்சர்களின் கார்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாது என அரசு நிறுவனமான அமுதசுரபி அறிவித்துள்ளது.

இதனையறியாத கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தனது காருக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். ஆனால், அங்குள்ள ஊழியர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அமைச்சரின் கார் ஓட்டுநர், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், அமைச்சரவைக் கூட்டத்திற்கு காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு அரசுப் பேருந்தில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் சென்றுள்ளார். பேருந்தில் அமைச்சர் பயணம்செய்தது குறித்து ஆளுநர் கிரண்பேடி அவரது வலைதளப் பதிவில் விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி

பதிவில் கூறியதாவது:

அரசு உயர் அலுவலகர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவியில் உள்ளவர்களும் அரசுப் பொதுப்போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தினால் அவற்றின் சேவைத்தரம் உயரும். இதனை, ஆளுநர் மாளிகை அலுவலர்கள் ஏற்கனவே செயல்பாட்டில் கொண்டுள்ளனர்.

மேலும், வரும் 18ஆம் தேதி ராஜ் நிவாஸ் அலுவலர்கள், ரயில் மூலம் ஏனாம் பிராந்தியம் பயணிக்க உள்ளனர். இவ்வாறு ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கிரண் பேடி ராஜினாமா செய்ய வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர்

Intro:காருக்கு பெட்ரோல் நிறுத்தம் எதிரொலி... அமைச்சரவை கூட்டத்திற்கு காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் வந்தார். பேருந்தில் அமைச்சர் பயணம் செய்வதற்கு துணைநிலை ஆளுநர்ர கிரண்பேடி விமர்சனம்.Body:புதுச்சேரி ..

காருக்கு பெட்ரோல் நிறுத்தம் எதிரொலி...

அமைச்சரவை கூட்டத்திற்கு காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் வந்தார். பேருந்தில் அமைச்சர் பயணம் செய்வதற்கு துணைநிலை ஆளுநர்ர கிரண்பேடி விமர்சனம்...

இதுதொடர்பாக வலைதள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அரசு உயரதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவியில் உள்ளவர்களும் அரசு பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவதால் அவற்றின் சேவைதரம் உயரும்..இதனை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு கொண்டு உள்ளனர்... வரும் 8ம் தேதி ராஜ் நிவாஸ் அதிகாரிகள் இடத்திற்கு ரயில் மூலம் ஏனாம் பிராந்தியம் பயணிக்க உள்ளனர்... என்று வலைத்தளத்தில் ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.Conclusion:காருக்கு பெட்ரோல் நிறுத்தம் எதிரொலி... அமைச்சரவை கூட்டத்திற்கு காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் வந்தார். பேருந்தில் அமைச்சர் பயணம் செய்வதற்கு துணைநிலை ஆளுநர்ர கிரண்பேடி விமர்சனம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.