கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டில் முகக்கவசங்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முகக்கவசங்களைத் தயாரிக்கும் பணிகளில் கேரளாவின் குடும்ப ஸ்ரீ சுய உதவிக் குழு பெண்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தப் புரட்சி மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் சொந்த மாவட்டமான கன்னூரில் தொடங்கி உள்ளது. இந்தப் பணிகளில் ஆறு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த முகக்கவசம் ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
குறைந்த விலை, சுற்றுச்சூழல் நட்பு துணி பைகள் தயாரித்து விற்பனை செய்துவரும் இந்தப் பெண்களுக்கு பஞ்சாயத்தும் முழு ஆதரவும் அளிக்கிறது. தொகுதி எம்எல்ஏவும் பாராட்டுத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருவர் உயிரிழந்துள்ளனர். இருமல், சளி பாதிப்புள்ளவர்கள் மட்டுமே முகக்கவசத்தை அணிய வேண்டும். கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தனித்துவமான முகக்கவசம் அணிய வேண்டும். ஒருமுறை அணிந்த முகக்கவசத்தை மறுமுறை அணியக் கூடாது. அந்த முகக்கவசத்தை தீயிட்டு எரித்துவிட வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெய்ப்பூரிலிருந்து போபால் திரும்பிய காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள்!