ETV Bharat / bharat

குடிபோதையில் கார் ஓட்டிய ஐஏஎஸ்? - செய்தியாளர் பலி - கார் மோதி

திருவனந்தபுரம்: ஐஏஎஸ் அலுவலர் ஒருவர் குடிபோதையில் ஓட்டிவந்த கார் மோதிய விபத்தில் செய்தியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kerala journalist
author img

By

Published : Aug 3, 2019, 1:29 PM IST

Updated : Aug 3, 2019, 2:48 PM IST

கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் கே.எம். பஷீர் (35). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் பத்திரிகை ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் இன்று காலையில் அவர் அந்தப் பகுதியில் உள்ள மியூசியம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது பின்புறம் வேகமாகவந்த கார் ஒன்று பைக் மீது மோதியதில், படுகாயமடைந்த பஷீர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் காரை ஓட்டிவந்தவரும் படுகாயமடைந்தார்.

செய்தியாளர் பஷீர், விபத்தில் சிக்கிய கார், பைக்

காரை ஓட்டிவந்தவர் ஐஏஎஸ் அலுவலர் ஸ்ரீராம் வெங்கட்டரமன் என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஸ்ரீராம் வெங்கட்டரமனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தான் காரை ஓட்டவில்லை என்றும், தனது நண்பர் வாஃபா ஃபெரோஸ்கான்தான் காரை ஓட்டிவந்ததாகத் தெரிவித்தார்.

ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஸ்ரீராம் வெங்கட்டரமன்தான் காரை அதிவேகமாய் ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காணொலிக் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய ஸ்ரீராம் வெங்கட்டரமன் புள்ளியியல் துறையில் இயக்குனராக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Kerala journalist killed after ‘drunk’ IAS officer’s car rams into bike   

Thiruvananthapuram: A journalist was killed in a car-bike accident here on Saturday early morning. Survey Director Sriram Venkataraman’s car rammed into a bike killing Thiruvananthapuram unit chief of Siraj newspaper and Malappuram native K M Basheer (35). Sriram was also injured in the accident and has been admitted at the private hospital here. 
There was a woman also in the car. However, Sriram has given statement to police that he was not driving the car, but his friend. But eyewitness to the accident said that the male inside the car was driving. Eyewitness also said that the person was drunk and the car was overspeeding. Police said that they will check the CCTV visuals to confirm this.
The accident took place near Museum police station on the wee hours of Saturday. The car rammed into the bike parked on the side of the road.
At first, police didn’t take the woman into custody and had let her off. They contacted her over phone only when media persons questioned this move.
The car is registered in the name of a woman Wafa Firoz in Thiruvananthapuram.
Basheer who started his journalistic career as regional reporter of Siraj in Tirur has also worked as Malappuram staff reporter and Thiruvananthapuram bureau chief. 

Conclusion:
Last Updated : Aug 3, 2019, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.