ETV Bharat / bharat

மாநில எல்லைகள் மூடக்கூடாது; அத்தியாவசிய பொருள்கள் வருவதில் தாமதம் - பினராயி

author img

By

Published : Mar 29, 2020, 10:02 AM IST

திருவனந்தபுரம்: மாநிலங்களுக்கு இடையே அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச்செல்வதற்கு ஏதுவாக மாநில நெடுஞ்சாலையை மூடக்கூடாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

kerala-cm-appreciates-tn-govt-for-inter-state-goods-movement-raises-concerns-over-karnataka-blocking-borders

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் மாநில எல்லைகளுக்குள் வருவதற்கு முன்னால் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரசால் அந்தந்த மாநிலங்கள் அதன் மாநில எல்லைகளை அடைத்துவருகின்றன. இதனால் கேரளாவுக்கு வரும் அத்தியாவசிய பொருள்களின் லாரிகள் வருவதற்கு வெகு நேரமாகிறது. இதனைச் சரிசெய்ய கேரள நீர் மேலாண்மை துறை அமைச்சர் இன்று தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்திக்கவுள்ளார். அதில், நடுபல்லி சோதனைச்சாவடி விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்வார்கள்.

ஆனால் மலப்புரத்தில் உள்ள மக்களுக்கு மருத்துவச் சாதனங்கள், அத்தியாவசிய பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டுவருவதற்கு கர்நாடக அரசு அனுமதிக்க வேண்டும். இது குறித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிடம் பேச தொடர்புகொண்டோம். ஆனால் அவரிடம் பேச முடியவில்லை. இதனால் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றுள்ளோம்.

பல்வேறு மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு வந்து பணிசெய்வோர் மீது தனிக்கவனம் செலுத்திவருகிறோம். அவர்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து அந்தந்த மாநில முதலமைச்சர்களுக்கு தெரியப்படுத்திவருகிறோம்.

மக்களுக்கு வீட்டிலிருந்தபடியே அனைத்தும் கிடைப்பதற்கு இணையம் மூலம் ஆர்டர்செய்யும் சேவையை அனுமதித்துள்ளோம். உணவு, தண்ணீர் ஆகிய அத்தியாவசிய பொருள்கள் மக்களின் கைகளுக்குக் கொண்டுசேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி விநியோகம் செய்யப்படவுள்ளது'' என்றார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.