கரோனா வைரஸ் தொற்று பிரச்னையை கேரள மாநிலம் சிறப்பாக கையாண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் கேரளாவிற்கு பாராட்டுகளைத் தெரிவிக்கும் இந்த நேரத்தில், மற்றொரு சாதனையை சத்தமே இல்லாமல் நிகழ்த்திக்காட்டியுள்ளது கடவுளின் தேசம் என அழைக்கப்படும், கேரளா.
குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைத்து சாதனைப் படைத்துள்ளது. 2020ஆம் ஆண்டில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளுக்கு எட்டு குழந்தைகள் இறப்பு என்ற எண்ணிக்கையை ஐக்கிய நாடுகளின் அவை தெரிவித்திருந்தது.
ஆனால், கேரள மாநிலமோ பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில், இறப்பு என்ற எண்ணிக்கையை ஏழாகக் குறைத்து சாதனைப் படைத்துள்ளது. முன்னர் ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், 10 குழந்தைகள் இறப்பு ஏற்படும் என்ற நிலையை கேரளா மாற்றிக்காட்டியுள்ளது.
இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் அதில் 993 குழந்தைகளை நாங்கள் காப்பாற்றுகிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் - யூனிசெஃப் தகவல்