கரோனா பாதிப்பு காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு பருப்பு வகைகள், வெல்லம், கோதுமை மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கேரள அரசு நிவாரணமாக இன்று அறிவித்தது.
அதன்படி, சுகாதாரத் துறையின் ஆதரவுடன், ஊக்குவிப்பாளர்கள் இந்த நபர்களின் வீடுகளில் ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா? என்பதைக் கண்டறியத் தொடங்கியுள்ளனர்.
தனிமையில் இருக்க வேண்டியவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். ஒரு சிறப்பு தொகுப்பு (கிட்) பருப்பு வகைகள், வெல்லம், கோதுமை மற்றும் தேங்காய் எண்ணெய் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. இதனை மாநில பட்டியில மற்றும் பழங்குடியின அமைச்சர் ஏ.கே. பாலன் கூறினார்.
கேரளத்தில் 31.84 லட்சம் பட்டியலின மக்களும், 4.84 லட்சம் பழங்குடியின மக்களும் உள்ளனர்.
நாடு முழுக்க கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாளை மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.