திஸ்பூர்: கதி பிஹூ என்பது அஸ்ஸாமிய மக்கள் தங்கள் வீடுகளையும் விவசாய வயல்களையும் சிறப்புடன் கொண்டுச் செல்வதற்காக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகக் கருதப்படுகிறது. இந்த தினத்தை மக்கள் தங்களது கலாசார நடனங்களுடனும், உணவுகளுடனும் கொண்டாடுகின்றனர்.
வயல்களில் வளர்ந்து வரும் நெல்களை தீமை விளைவிக்கும் பூச்சிகளிடமிருந்து காக்கவும், விவசாயிகளின் களஞ்சியங்களில் சேமிப்பை அதிகரிக்கவும், வீட்டுத் துளசி செடிகளின் அடிவாரத்திலும், வயல் வெளிகளிலும் அகல் விளக்குகளைை ஏந்தி மக்கள் பூஜை செய்வர்.
முதிர்ச்சியடைந்த நெல்லைப் பாதுகாக்க, பயிரிடுபவர்கள் மூங்கிலின் ஒரு பகுதியைச் சுழற்றி, பூச்சிகள் மற்றும் தீய எண்ணங்கள் பயிர்களை நெருங்குவதைத் தடுக்க மந்திரங்கள் ஓதுவர்.
அஸ்ஸாமிய மக்களின் வாழ்வாதாரத்தை சிறப்பிக்க விவசாயம் முதன்மை ஆதாரமாக இருப்பதால், எங்கள் மாநிலத்திற்கு நல்வாழ்வு கிடைத்திடவும், வாழ்வாதாரம் மேலும் ஓங்கவும் ஆண்டுதோறும் இந்த தினத்தில் பிராத்தனை செய்வோம் என்கின்றனர் அம்மாநில மக்கள்.