கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பதாமி கிராம பகுதிகளை நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் வயதான பெண்மணி ஒருவரை எதிர்கொள்ள நேர்ந்தது. அப்பெண் வெள்ளத்தில் தனது உடைமை மற்றும் வீட்டை இழந்தவர்.
இந்த நிலையில் அவர் சித்த ராமையாவை பார்த்ததும் அவரின் அருகில் சென்று பேசினார். அப்போது, ”நீங்கள் எல்லோரும் சொன்னீர்கள்... வாக்களித்தால், வீடு கிடைக்கும் என்றீர்கள். தற்போது நீங்கள் எங்கள் வாக்குகளை பெற்று விட்டீர்கள். எங்களுக்கு யார் வீடு கொடுப்பார்” என்றார்.
இதைக்கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்து போன சித்தராமையா, அப்பெண்ணுக்கு அனுகூலமான பதில் அளித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து தற்போது பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருவது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: கடும் எதிர்ப்புக்கு மத்தியில் டி.கே. சிவக்குமாருக்குப் பிணை