ETV Bharat / bharat

'மசூதியும் கோயிலும் எனக்கு ஒன்றுதான்' - அனுமன் கோயிலுக்கு நிலம் வழங்கிய இஸ்லாமியர் பிரத்யேக பேட்டி! - கர்நாடகம்

மசூதியும் கோயிலும் தனக்கு ஒன்றுதான் என்று அனுமன் கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை தானமாக அளித்த இஸ்லாமியர் பாட்ஷா என்பவர் தெரிவித்துள்ளார்.

Hanuman temple
Hanuman temple
author img

By

Published : Dec 10, 2020, 11:13 AM IST

பெங்களூருவில் உள்ள கொசஹோட் தாலுகாவில் அனுமன் கோயில் உள்ளது. கொசஹோட்டிலுள்ளு இந்தக் கோயில் பெங்களூரு-சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அமைந்துள்ளது.

கொசஹோட் தாலுகாவின் உள்ள கடுகோடியில் உள்ள பெலாதூர் காலனியில் வசிக்கும் எச்எம்ஜி பாஷா என்பவர், இந்த அனுமன் கோயிலை புதுப்பிப்பதற்காக 1633.63 சதுர அடி நிலத்தை ஸ்ரீ வீரஞ்சநேயசுவாமி தேவலயா சேவா அறக்கட்டளைக்கு தானமாக வழங்கியுள்ளார்.

இது குறித்து பாஷா நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் தெரிவிக்கையில், "இந்தக் கோயிலில் சாமி தரிசனம் செய்தவற்கு போதிய இடமில்லாததால் மக்கள் மிகுந்த சிரமம் அடைவதை நான் கண்டதால் இந்த முடிவை எடுத்தேன்.

எனவே ஆஞ்சநேயா கோயில் கட்டுவதற்காக பெங்களூரு கொசஹோட் அருகே உள்ள வாலகேரபுரா-மைலாபோரா கேட் அருகே 1.5 குன்ட்டா (1634 சதுர அடி) நிலத்தை இலவசமாக நன்கொடையாக அளித்துள்ளேன். எனது நில உரிமையை வீரஞ்சநேய சுவாமி சேவா அறக்கட்டளைக்கு மாற்றுவேன்.

எனக்கு எந்த மத பாகுபாடும் இல்லை. இந்தக் கோயில் மூன்று தலைமுறைக்கும் மேலாக பக்தர்கள் வழிபட்டுவருகின்றனர். இதற்கு எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர். மசூதியோ அல்லது கோயிலோ எல்லாமே எனக்கு முக்கியம். இது சமுதாயத்திற்கு உதவும் என்று நம்புகிறேன்"என்று அவர் கூறினார்.

அவரின் இந்தச் செயலைப் பாராட்டி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கிராமத்திற்குள் சுற்றித்திரியும் ஒற்றை யானை:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.