கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்திலுள்ள குமரேஷ்வர் நகரில் ஐந்து மாடிக் கட்டடப்பணிகள் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் மார்ச் 19ஆம் தேதி கட்டடம் எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது. இந்த மோசமான விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுவருகின்றனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்ட கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், விபத்து குறித்து நீதிமன்ற விசாரணையை மேற்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 56 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 12 பேர் காணாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.