கர்நாடகா மாநிலம், மைசூரு மாவட்டத்தில் உள்ள குடநூறு கிராமாத்தில் மதிகௌடா என்பவரின் மகனான ராஜசேகர் ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பு படித்தவர்.
ராஜசேகர் படித்த படிப்புக்கு லட்சக்கணக்கில் வருமானம் தரக்கூடிய வேலைகள் கிடைத்தும் அவை யாவையும் உதறித் தள்ளிவிட்டு, விவசாயம் மீது கொண்ட நாட்டத்தினால் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்ய முனைந்துள்ளார். குறிப்பாக, தனது அரை ஏக்கர் நிலத்தில் வட இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆயிரத்து 600 ஸ்ட்ராபெர்ரி செடிகளைப் பயிரிட்டு விவசாயத்தைத் தொடங்கினார்.
இது தற்போது அவருக்கு நன்கு விளைச்சலை கொடுத்து வருகிறது. இதன் மூலம் ஒரு கிலோ ஸ்ட்ராபெர்ரி பழத்துக்கு ஆயிரத்து 200 ரூபாய் வரை ராஜசேகர் பெற்று வருகிறார்.
பொறியியல் படிப்பு படித்தவர்கள் பலர் வேலைவாய்ப்பு இன்மையால் தவித்துவரும் நிலையில், மற்ற மாணவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக ராஜசேகரின் இந்த முயற்சி உள்ளது.
இதையும் படியுங்க: இயற்கை அறுவடையில் அசத்தும் விவசாயி!