ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் சுர்சங் பகுதியைச் சேர்ந்தவர் மதுபான விற்பனையாளர் சரோ தேவி. இன்று அதிகாலை இவரது வீட்டிற்கு அடையாளம் தெரியாத சில நபர்கள் வந்து மதுபானம் தருமாறு கேட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தன்னிடம் மதுபானம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் நடைபெற, மது வாங்க வந்தவர்கள் சரோ தேவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பியுள்ளனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:உபியில் பட்டியலின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு