ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 22 தொகுதிகளிலும், சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றி ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க உள்ளார். முதலமைச்சர் பதவியேற்பு விழா வரும் 30ஆம் தேதி, விஜயவாடாவில் மதியம் 12.30 மணிக்கு நடக்க இருக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி பிரதமர் மோடி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை, ஜெகன் மோகன் தொலைபேசி வாயிலாக பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்து, முதலமைச்சர் பதவியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகியுள்ளார்.