உத்தரகாண்ட் மாநிலம் புக்தயார் அருகே வசித்த 30 வயது இளைஞர் ஒருவர், பித்தோராகரின் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கற்களால் தாக்கியதில் உயிரிழந்தார் என இந்தோ-திபெத்திய எல்லை காவல் 14ஆவது பட்டாலியனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த காவலர்கள் அவரது உடலைக் கைப்பற்றி, 25 கி.மீ தொலைவிலுள்ள அவரது சொந்த ஊருக்கு ஸ்டக்சரில் வைத்து சுமந்து கொண்டு சென்றுள்ளனர்.
பட்டாலியன் படையைச் சேர்ந்த எட்டு வீரர்கள் காலை 11.30 மணியளவில் சடலத்தைக் கைப்பற்றிய நிலையில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அவருடைய சொந்த ஊருக்கு சுமார் எட்டு மணி நேரம் நடந்தே சென்றுள்ளனர்.
பின்னர், இறந்தவரின் சடலத்தை மாலை 4.30 மணியளவில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து இறுதிச் சடங்கை நிகழ்த்தினர்.