தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ரஹேஜா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IT Park) ஊழியர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் அப்பகுதி காவல் துறையினர், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட நபரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்தியாவில் தற்போது 25 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்