நீரானது தாயைப் போன்று பெரிதும் பேணுகிறதாயிருக்கிறது என்பது தைத்திரிய சம்ஹிதாவின் கூற்றாகும். சூழலியல் வன்முறை என்பது அலட்சியப்போக்கைப் போன்று தொற்றுத்தன்மையுடையதாயிருப்பது இந்திய சமுதாயத்தில் இயல்பானதொன்றாகிவிட்டது. வன்முறையானது அலட்சியம் என்றழைக்கப்படும் ஊசியினால் நம்முடைய நரம்புகளில் உட்செலுத்தப்படும் வடிகட்டப்பட்ட அபின் ஹெராயினைப் போன்றிருக்கிறது.
ஆம், நாம் அதை நேசிக்கின்றோம். இரண்டு இரட்டையர்களான – வன்முறையும், அலட்சியமும் ஒரு தேசத்தினை கிரக அழிவுப்பாதையில் உயர்த்தி நிறுத்தப் போதுமானதாயிருக்கிறது. நமது மலையையும், நீர்பிடிப்புக் காடுகளையும் நாம் வெட்டிவிட்டோம். இந்நிலையில் இறுதியாக பாரதமானது சூழல்மாயாவிற்கு வந்துவிட்டது.
அதன் கிரயமாக, ஏழு லட்சம் மக்கள் நீர் மாசுபடுதலால் காலத்திற்கு முன்னரே இறந்துவிடுவதுமட்டுமன்றி மில்லியன் கணக்கானோர் சீதபேதி முதல் கனஉலோக நஞ்சுவரையிலான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். நமது மேற்பரப்பு நீர்வள ஆதாரங்கள் சுருங்கவும், மேலும் நிலத்தடி நீர் கீழ்நோக்கி புதிய ஆழத்திற்கு உள்வாங்கியும் வரும் நிலையானது அடுத்த பத்தாண்டுகளில் தண்ணீர் போர்கள் உண்டாகப்போவதை முன்னுரைக்கிறது.
மாயையுடனான இளம் இந்திய "ஒப்பந்ததாரர்கள்" நம் நதிகளையும், மணற்படுகைகளையும், கொள்ளையடித்து அழிப்பதோடன்றி, சட்டவிரோதமாக ஜல்லிக்கற்கள் மற்றும் படுகைபாறைகளையும் திருடுகிறார்கள்.
அதேசமயம், முதுமொழியியல்பான வயதான தலைமுறையினர் நம்மீது திணித்த அக்கறையின்மையை மறந்துவிட்டு கடமையைப்பற்றி போதிக்கிறார்கள். மாசுபாட்டுக்கு அரசு பொறுப்பல்ல. அது இந்தியாவின் ஆத்துமாவைச் சிதைக்கும் மக்களின் பாவங்களான பேராசை, உணர்வற்ற தன்மையுமேயாகும். நமது சமுதாயம் வன்முறையையும், அலட்சியத்தையும் தழுவிக்கொண்டதன் விளைவு நம் தாயான கங்கையைத் தியாகம் செய்துவிட்டது.
உயிருள்ள தேவியாக இருந்த நதியானது இன்று செழிப்பான வண்டல், தாதுப்பொருட்களற்றதாயும், நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகள், கோடிக்கணக்கான லிட்டர் அளவு மலத்துடனும் உள்ளது. சுத்திகரிக்கப்படாத கழிவுகள் ஆறுகளில் வந்துசேருவதால், கனஉலோகங்களும், மருந்து எதிர்ப்பு நோய்கிருமிகளும், இறப்புகளும் அந்த நதியில் உள்ளது.
உலகில் அதிக மாசடைந்த நதிகளில் கங்கையானது நான்காவது இடத்திலுள்ளது. மேலும் அது மனிதர்களுக்கு மட்டுமன்றி, மீன்களுக்கும், தாவரங்களுக்கும்கூட நச்சுத்தன்மை உடையதாகவும் இருக்கிறது. நமது அரசின் சொந்த மதிப்பீடுகளுக்கு NYT(Newyork Times)இல் இருந்து வரும் செய்திகள் கொஞ்சங்குறைய நமது கங்கைச் சமவெளி முழுவதிலும் கழிவுநீர் கழிவுகள் படர்ந்திருப்பதாகத் தெரிவிக்கிறது.
கங்கை யாத்திரை, விழிப்புணர்வு இயக்கங்கள் இந்தப் பிரச்சனையைத் குணப்படுத்தக்கூடிய முதல் நடவடிக்கைகளாக இருக்கலாம். ஆனால் அது தீர்விலிருந்து வெகு தொலைவில் உள்ளது. ஆயிரக்கணக்கான கோடிகள் ஏற்கனவே கங்கையைக் காப்பாற்றச் செலவழிக்கப்பட்டிருந்தாலும், இன்றும் அலகாபாத் நதியிலுள்ள குறைந்த அளவு தண்ணீர்கூட குடிப்பதற்குத் தகுதியற்றதாக இருக்கிறது.
2019இல் நடந்த கும்பமேளாவின் பின்நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது. இந்துமத நம்பிக்கையின் மிகத்திரளான கூட்டமானது முழு நகரமும் நதிக்கரைகளில் உள்ள குப்பைகள், அழுகும் கழிவுகளால் நிறைந்திருப்பதையே கண்டது. லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை மீது எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால், இந்த நம்பிக்கையானது நல்ல நம்பிக்கையில் இருக்கிறதா என்பதே கேள்வியாகும்.
பதில் தந்திரமானதாக இருக்கிறது. ஆனாலும், உண்மை வெளிப்படையானதாகும். தவறாக வழிநடத்தப்பட்ட விசுவாசமோ அல்லது விசுவாசத்திற்கு செய்த உதட்டளவிலான சேவையோ பல சகாப்தங்களாக உலகின் மிகப்பெரிய நதி அமைப்புகளில் ஒன்றான நதியைக் கொன்றேவிட்டது. பாவம் செய்யும் மனதுக்கு, கங்கையில் குளிப்பது மலிவானதொன்றாகும்.
நதியினைக் கவனிக்காமல் தன்னைத்தானே கவனித்திற்கொள்வதென்பது இந்துமதம் இல்லை. ஆனால் அது இந்துமதத்திற்குச் செய்யும் வக்கிரமச் செயலாகும். தீர்வானது கடினமானதும் தியாகத்தினை உள்ளடக்கியதாயும் இருக்கிறது. முதலாவதாக, குறிப்பாக உத்தரகாண்ட் மேற்பகுதியில் உள்ள நதியில், புனித நீராடலை நாம் நல்நம்பிகையுடன் ஒழுங்குபடுத்த வேண்டும்.
அப்பகுதியில் 8 சதவிகித மாசு இருப்பதால் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கங்கை நதியின் பாதுகாப்பு குறித்த தேசிய திட்டம், குறிப்பாக ஆற்றின் மேற்பகுதியில் உள்ள கழிவுநீர் மேலாண்மையில் சிறப்பான கவனம் செலுத்துதல் வேண்டும். தற்போது நாம் கங்கையில் கழிவுகளைக் கொட்டுவதை நிறுத்த முடியாது.
நீர் ஆதாரத்தில் தூய்மையை நாம் உறுதி செய்ய வேண்டும். பயனுள்ள கழிவுநீர் மேலாண்மை அமைப்பு இல்லாமல் நதியானது ஒருபோதும் குணமடைய முடியாது. நதி முழுவதும், அதின் உபநதிகள் உட்பட நீர் ஆரோக்கியம் பற்றிய அறிக்கைகள அறிந்துகொள்ள சுறுசுறுப்புடன் இயங்கக்கூடிய ஒரு நுழைவாயில் 'போர்டல்' தேவை.
அடுத்த கட்டமாக, கங்கையின் நீர்பிடிப்புப் பகுதிகளை மீட்கவேண்டும். அதன் பொருள் என்னவென்றால், கங்கையின் அனைத்து உபநதிகளும் ஒரு தேசியப் பொக்கிஷமாக அறிவிக்கப்பட வேண்டும். மணல் அகழ்வு, பாறை அகழ்வு அல்லது கழிவுகளைக் கொட்டுவது போன்ற செயல்கள் ஒரு தீவிரமான குற்றமாக அறிவிக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் முன்மொழியப்பட வேண்டும்.
மிக அண்மையிலுள்ள எதிர்காலத்தில் தங்கத்தைவிட தண்ணீர் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கலாம் என்பதால், இந்தப் பிரச்சினைகள் குறித்து மாநிலங்கள் முழுவதும் உள்ள கிராமப்புற போலீசாருக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். ஆனால், மிகப்பெரிய மாசுப்பட்டைத் தொழில்துறைக்கு கடுமையான கட்டுப்பாடுகள், புதிய சுத்தமான கங்கை வரியும் தேவையாகும்.
கடுமையான விதிமுறைகளின் ஒரு பகுதியாக அரசாங்கமானது நார்வே அல்லது ஸ்வீடன் நாடுகளையும் அதின் நதிக்கொள்கையினையும் பார்க்க வேண்டும். அனைத்து மாசுபடுத்தும் தொழிற்சாலைகளும் ஒரு சுத்திகரிப்பு நிலையத்தினை அமைக்க வேண்டும். மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீரினைக் குறித்து அளிக்கும் அறிக்கைகள், ஒரு மூன்றாம் தரப்பினரால் முழுமையான வெளிப்படைத்தன்மைக்காக சரிபார்க்கப்பட வேண்டும்.
கங்கை வடிநிலத்திலுள்ள பெரும் மாசுபடுத்தும் நகரங்களிடமிருந்து நிதி உதவி பெற்று, புத்துணர்வு நடவடிக்கைகளுக்காக அந்த நிதியானது மறு விநியோகம் செய்யப்படவேண்டும். சூழல்-தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படவேண்டும். சூழலியல் சேவைகள் மதிப்புடன் ஒருமை பெறவேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இயலாவிட்டால், அவைகள் இந்தத் தொழில்முனைவோருடன் இணைந்து சூழலியல் சேவைகளை வழங்கச் செய்யமுடியும்.
ஆற்றின் நெடுகிலும் உள்ள சிறு பகுதிகள் பசுமைத் தொழில் மண்டலங்களாக அல்லாமல், ஆற்றின் நெடுகிலும் நீரைத் தூய்மைப்படுத்தல், பசுமைப் பகுதிகளை ஊக்குவித்தல் போன்ற திட்டங்களுக்காக பிரத்தியேகமான ஒரு தொழில் மண்டலம் உருவாக்கப்பட வேண்டும். கங்கையைச் சுற்றியுள்ள தொண்டு நிறுவனங்களும், விவசாயிகளும் இயற்கை வேளாண்மையை கடைபிடிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.
மாநில அரசுகள் இயற்கை பண்ணைகளுக்கு மாற்றம் செய்ய மானியங்களை வழங்கவேண்டும். கங்கா ஆர்கானிக் என்பது நுகர்வோர்களுக்கு ஒரு அடையாளம் என்ற முறையில் கூட உருவாக்கப்பட முடியும். இதற்கென்று ஒரு வேலைத்திட்டத்தினை பிகார் அரசாங்கமானது ஜவிக் சேது என்ற பெயரில் கங்கைச் சமவெளி முழுவதும் மேற்கொண்டுள்ளது.
கங்கை அல்லது யமுனா அல்லது வேறு எந்த நதியின் நெருக்கடியையும் முடிவுக்கு கொண்டுவருவது நம்பிக்கையின் நெருக்கடியாக இருக்கிறது. நாம் ஒரு சமுதாயம் என்ற முறையில், நம்முடைய கலாச்சாரத்தை அழித்து, அறுவடையாக நோய், மாசுபாட்டினையும் அறுத்துக்கொண்டு இருக்கிறோம். உயிரற்ற ஒரு நதி, இறந்துபோன நம்பிக்கையையும், இறந்த இந்து மதத்தினையும் பிரதிபலிக்கிறது.
நமது பேராசையும், நமது மதமும் ஒன்றிணைந்து இயங்க முடியாது. ஒன்று நதியானது அதன் எல்லா புனிதத்தன்மையையும் தனக்குள் கொண்டு உயிரோடிக்கும் அல்லது பேராசையும் சூழலியல் அழிவும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும். பணமும், அரசாங்கமும் மட்டுமே கங்கையைச் சுத்தப்படுத்தப் போதாது. தியாகம், விசுவாசமுமே நம் நதியைக் குணப்படுத்த முடியும். நமது சமுதாயத்தில் கடமை உணர்வு மீண்டும் உருவாகவேண்டும் என்பதை உறுதி செய்ய கங்கா சத்தியாக்கிரகம் தேவை.
ஜீவனளிக்கும் நம்முடைய தாய் நதிகள் இப்போது நஞ்சினை வெளியே கொட்டிக்கொண்டிருக்கிறதென்றால் அவையனைத்தும் நம்முடைய கிரியைகளே. இந்திய மக்களும், நதி நாகரீகக் குழந்தைகளுமான நாம் நம்முடைய தாய்மார்களான இந்திய நதிகளின் அன்பினையும், தூய்மையினையும் மீட்டெடுக்கவேண்டிய தருணம் இதுவே.
கருடபுராணத்திலிருந்து ஒருவருக்கு நினைப்பூட்டவேண்டியது என்னவெனில், "ஆயிரக்கணக்கான மனிதர்களின் பாவங்கள் கங்கை நதியின் புனிதக் காட்சியால் அழிக்கப்பட்டுவிடுகின்றன. கங்கை நீரின் தொடுகை மூலமும், அதனை உட்கொள்வதன் மூலம் அல்லது கங்கையை உச்சரிப்பதன் மூலமும் அவன் தூய்மையடைகிறான்." அதுவே நம்முடைய கங்கைத் தாயின் பரிசுத்தமும், புனிதமும் ஆகும்.
நம்மையும், நம்முடைய பேராசை, சுயநலம், சூழலியல் வன்முறைகள் அடங்கிய நம்முடைய சமுதாயத்தையும் தூய்மைப்படுத்திக்கொள்ளவும், நம்முடைய தாயான கங்கையை நன்னம்பிக்கை மூலம் தூய்மைப்படுத்தவும் உரிய தருணம் இதுவே.