ஜம்மு - காஷ்மீரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மே மாதம் நடைபெறவுள்ளது. இதுகுறித்த முதலீட்டாளர்களின் கலந்துரையாடல் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் கிவல் குமார் சர்மா முதலீட்டாளர்களுடன் பேசுகையில், "சட்டம் ஒழுங்கு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக காஷ்மீரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களில் இணைப்பு சேவைகளுக்ககாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், இணைய சேவைகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: உச்ச கட்ட உட்கட்சி பூசல் - காங்கிரஸ் கட்சியில் கெஜ்ரிவால் ஆதரவும் எதிர்ப்பும்!