வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் சமுத்திர சேது திட்டத்தின் மூலம் இந்தியக் கடற்படை தன் கப்பல்போக்குவரத்து வாயிலாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்துவரும் பணிகளை செய்துவருகிறது.
ஈரான் நாட்டில் சிக்கயிருந்த 233 இந்தியர்களை இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஷர்துல் கப்பல் மூலம் அந்நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியான பந்தர் அப்பாஸிலிருந்து குஜராத் மாநிலம், போர்பந்தர் நகரத்துக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
கப்பலில் பயணிகளுக்கு தேவையான முகக்கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்கும். அதேபோல் மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளிட்டோரும் இருப்பர்.
இதுவரை இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2, 874 இந்தியர்கள் மீட்கப்பட்டு கேரளா, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு அழைத்துவரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாலத்தீவிலிருந்து தூத்துக்குடி வந்த ஐ.என்.எஸ் ஜலஸ்வா கப்பல்!