ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி : மருத்துவ நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - மத்திய அரசு விளக்கம் - ​​சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு கடமை அலுவலர் ராஜேஷ் பூஷண்

டெல்லி : கோவிட் -19 தடுப்பூசி உருவாக்க காலக்கெடு என்பதே பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் செய்யாமல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை விரைவுப்படுத்துவதற்கு மட்டுமே என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.

கரோனா தடுப்பூசி : மருத்துவ நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - மத்திய அரசு விளக்கம்

author img

By

Published : Jul 10, 2020, 1:04 AM IST

இது தொடர்பாக ஊடகங்களைச் சந்தித்த ​​சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு கடமை அலுவலர் ராஜேஷ் பூஷண், " ஐ.சி.எம்.ஆரின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா, கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரித்து வரும் பாரத் பயோடெக் மற்றும் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் முதன்மை ஆய்வாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஆகஸ்ட் 15ஆம் தேதியை முன்வைத்து பேசியிருந்தது, உள்நாட்டு கோவிட் -19 தடுப்பூசியின் பரிசோதனை முறையை விரைவாக முன்னெடுக்க தானே ஒழிய அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல. எனவே, கடிதத்தில் இல்லாத ஒன்றை தயவுசெய்து மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டாம்.

Indigenous vaccine trial will start soon

கடிதத்தின் நோக்கம் பாதுகாப்பில், அறிவியல் சோதனைகளில் சமரசம் செய்யாமல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை விரைவுப்படுத்துவதாகும். பாரத் பயோடெக் மற்றும் காடிலா ஹெல்த்கேர் தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றன. இரண்டு தடுப்பூசிகளும் ஒப்புதலுக்குப் பிறகு விலங்குகள் மீது ஆய்வு செய்யப்பட்டது.

இதன் பின்னரே, தடுப்பூசிக்கான இருகட்ட மனித மருத்துவ பரிசோதனைகளுக்கான அனுமதியை முறையாக மருத்துவக் கட்டுப்பாட்டு தலைமையகம் அளித்துள்ளது. சோதனைகள் இன்னும் தொடங்கவில்லை. விரைவில் தொடங்கும் என்று நம்புகிறேன்.

பாரத் பயோடெக் சமீபத்தில் அதன் தடுப்பூசி - கோவாக்சின் மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புதல் பெற்றது. தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைகளை விரைவாக கண்காணிக்க மொத்தம் 12 நிறுவனங்கள் ஐ.சி.எம்.ஆரால் நியமிக்கப்பட்டுள்ளன.

நாம் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. 1.3 பில்லியன் மக்கள் தொகை இருந்தபோதிலும், மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா கரோனாவை ஒப்பீட்டளவில் சிறப்பாக நிர்வகித்து வருகிறது.

ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு பாதிப்பு வழக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால், அது இன்னும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது.

ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 15 இறப்புகள் உள்ளன, அதேசமயம் 40 மடங்கு அதிகமான நாடுகள் உள்ளன. "இன்று ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 538 வழக்குகள் உள்ளன. இது உலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கையின் மூலமாகவே இதை நாம் உணர முடியும். மற்ற நாடுகளில் பாதிப்பு நிலவரம் இந்தியாவில் இருப்பதை விட குறைந்தது 16-17 மடங்கு அதிகம்" என்றார்.

இதுவரை இந்தியாவில் கோவிட்-19 காரணமாக 7 லட்சத்து 67 ஆயிரத்து 296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 789 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 லட்சத்து 76 ஆயிரத்து 378 பேர் குணப்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். 21 ஆயிரத்து 129 பேர் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.