ராய்ப்பூரில் உள்ள பி.டி.ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய பொருளாதார சங்கத்தின் 102ஆவது ஆண்டு மாநாட்டைத் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், "இந்த நிதியாண்டின் வளர்ச்சி குறைந்துள்ளதால், இந்திய பொருளாதாரம் தற்போது சில சவால்களை எதிர்கொண்டுள்ளது.
கடந்த காலங்களிலும்கூட, கிழக்கு ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்டபோதும், உலகளாவிய மந்த நிலையை ஏற்பட்டபோதும் இதேபோன்ற சரிவை எதிர்கொண்டுள்ளது. ஆனால், சரிவுக்கு பின் ஒவ்வொரு முறையும் அதிக வளர்ச்சி விழுக்காட்டுடன் முன்னேறியது.
66 லட்சம் பேர் புதிதாக ஜிஎஸ்டியில் தங்களை பதிவு செய்துள்ளனர். இது பொருளாதாரம் முறைப்படுத்துவதைக் குறிக்கிறது. வராக்கடனை நிர்வகிக்கவும், வங்கிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்களை மேற்கொண்டுள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை நிலையானதாக மாற்றவேண்டும். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும்.
பெரும்பாலான மாநிலங்கள் தங்களது நிதிப் பற்றாக்குறையை அனுமதிக்கப்பட்ட 3 விழுக்காட்டுக்கு கீழ் தக்க வைத்துக்கொண்டன. ஆனால், இந்த இலக்கு குறைந்த மூலதன முதலீட்டால்தான் சாத்தியப்பட்டுள்ளது" என்றார்.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை வலுவானதாக மாற்றவே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆந்திராவுக்கு 3 தலைநகர் முடிவு? ஒப்புதல் அளித்ததா அமைச்சரவை?