ஈரானில் கரோனாவின் பிடியில் சிக்கித்தவித்த இந்தியர்களை பாதுகாக்கும் நோக்கில், அந்நாட்டிலிருந்து ஐந்து குழுக்களாக சுமார் ஆயிரத்து 36 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரிலும், ஜோத்பூரில் உள்ள இராணுவ நல மையத்திலும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்தவுடன் அங்கு தங்கியிருந்த காஷ்மீர் மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், உயர் அலுவலர்களின் தலையீட்டிற்குப் பிறகு, நேற்று பிற்பகல் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானத்தில் ஜெய்சால்மரில் இருந்து ஸ்ரீநகருக்கு மொத்தம் 150 பேர் அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு கரோனா பரிசோதனை