நீண்ட கால சிக்கலான அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை கடந்தாண்டு வெளியிட்டது. அந்தத் தீர்ப்பின்படி, கோயில் அறங்காவல் குழு ஒன்று அமைக்கப்பட்டு, கோயில் கட்டுமானப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. அதில், உலகமே கரோனா பாதிப்பை தீவிரமாக எதிர்கொண்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் இந்துத்துவா கூட்டணி இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது மோசமானது எனத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில், “பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் இந்த கருத்து அர்த்தமற்றது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையீடு அர்த்தமற்றது. இந்தியா, அரசியலமைப்பு சட்டத்தின்படி இயங்கும் நாடாகும். இங்கு அனைத்து குடிமக்களுக்கும் உரிய உரிமைகள் வழங்கப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: வெட்டுக்கிளிகளின் திரள்: பிகார், ஒடிஷா விவசாயிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை