ETV Bharat / bharat

இந்தியா பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது: நாசா குற்றச்சாட்டு - DRDO

வாஷிங்டன்: விண்வெளியில் இந்தியா மேற்கொண்ட ஏசாட் சோதனை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தியுள்ளதாக நாசா விமர்சித்துள்ளது.

ISS
author img

By

Published : Apr 2, 2019, 11:07 AM IST

விண்வெளியில் பூமியை சுற்றிவரும் செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை , மார்ச் 27ஆம் தேதி, இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இதற்கு 'மிஷன் சக்தி' என்று பெயரிடப்பட்டது.

இந்தச் சோதனை குறித்து குறித்து உலகளவில் பல்வேறு விஞ்ஞானிகளும், தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துவரும் நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக நாசா விமர்சித்துள்ளது.

இதுபற்றி நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் பேசுகையில், " இந்தியாவின் சோதனையால் 400க்கும் மேற்பட்ட விண்வெளித் துகள்கள் புவி வட்டப் பாதையில் சுற்றி வருகின்றனர். அவற்றில் சுமார் 60 துகள்களின் போக்கைக் கண்காணித்து வருகிறோம். தற்போது, அவை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சற்று மேலே பறந்து வருகிறது.

இதனால், ஆராய்ச்சி மையம் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு 44 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், அங்கு பணியாற்றிவரும் விண்வெளி வீரர்களின் உயிருக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இதில் நல்ல செய்தி என்னவென்றால் இந்தத் துகல்கள் தாழ்வான புவி வட்டப் பாதையில் சுற்றிவருவதால் விரைவில் அழிந்துவிடும்.

இதேபோன்று, 2017ல் சீன மேற்கொண்ட சோதனையில் ஏற்பட்ட விண்வெளித் துகள்களை இன்னமும் நாம் எதிர்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.