ETV Bharat / bharat

கோவிட்-19 இந்திய நிலவரம்: ஒரே நாளில் 8 லட்சத்துக்கும் மேல் பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்

டெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8.3 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ICMR
ICMR
author img

By

Published : Aug 13, 2020, 9:05 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 66 ஆயிரத்து 999 கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் 942 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 24 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 23 லட்சத்து 96 ஆயிரத்து 637 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 லட்சத்து 53 ஆயிரத்து 922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் இதுவரை 47 ஆயிரத்து 33 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (ஆகஸ்ட் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 8 லட்சத்து 30 ஆயிரத்து 391 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் இரண்டு கோடியே 68 லட்சத்து 688 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள்: மத்திய அரசு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.