ஆசியன் (ASEAN) உறுப்பு நாடுகள், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையே தடையில்லாத வர்த்தகத்தை ஏற்படுத்தி வகைசெய்யும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership) குறித்து, இந்நாடுகளின் தலைவர்கள் தாய்லாந்தில் நடந்த உச்சிமாநாட்டில் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் நாட்டின் நலனுக்கு மாறாக உள்ளதெனக் கூறி அதில் கையெழுத்திட இந்தியா மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதையும் வாசிங்க : இந்தியாவை நோக்கி கண்களைத் திருப்பும் உலக நாடுகள்!
உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் நலன்கருதி பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என அரசு உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக கருதப்படும் ஏற்றுமதி-இறக்குமதி உள்ளிட்ட பிரச்னைகளே இதற்கு காரணமாக சொல்லப்படுகின்றன. குறிப்பாக, சீனாவிலிருந்து அதிகப்படியான பொருள்கள் இந்தியாவுக்குள் இறக்குமதி செயப்பட்டால் இங்கிருக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்/விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என இந்தியா கருதுவதே இந்த நிலைப்பாட்டிற்குக் காரணம்.