ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் 66 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு - Indian Council of Medical Research

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 66 லட்சத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

COVID-19
COVID-19
author img

By

Published : Oct 5, 2020, 1:03 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 74 ஆயிரத்து 442 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் 903 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 66 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 66 லட்சத்து 23 ஆயிரத்து 816 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 லட்சத்து 34 ஆயிரத்து 427 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 55 லட்சத்து 86 ஆயிரத்து 703 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 685 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (அக். 5) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 9 லட்சத்து 89 ஆயிரத்து 860 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 7 கோடியே 99 லட்சத்து 82 ஆயிரத்து 394 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹத்ராஸ் விவகாரம்: பீம் ஆர்மி தலைவர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.