இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 50 ஆயிரத்தைத் தாண்டுகிறது. வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 61 ஆயிரத்து 190ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 40ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 51ஆயிரத்து 555ஆக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.