ஏர் இந்தியா ஊழியர்களுக்கு மத்திய அரசு 70 முதல் 75 விழுக்காடுவரை ஊதிய குறைப்பு செய்ய முடிவு எடுத்துள்ளது. அதேபோல் சில ஊழியர்களை ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பில் அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. இதனிடையே ஏர் இந்தியா வணிக விமானிகள் சங்கம் சார்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை உடனடியாக சந்திக்க வேண்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், '' ஜூலை 16ஆம் தேதியன்று ஏர் இந்தியாவின் தற்போதைய சூழல் பற்றி அலுவலர்கள் தவறான தகவல்களை அளித்துள்ளனர். சம்பள குறைப்பு என்பது அனைவருக்குமானது அல்ல என்பதை தெரிவிக்காமல் விட்டுள்ளனர்.
ஏர் இந்தியா ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் என்பது எச்ஆர்ஏ மற்றும் டிஏ ஆகியவை பொது ஊழியர்களுக்கான மொத்த ஊதியத்திலிருந்து 80 விழுக்காடாகும். விமானிகளுக்கு அடிப்படை ஊதியம், எச்ஆர்ஏ மற்றும் டிஏ ஆகியவை மொத்த ஊதியத்தில் 20 விழுக்காடு. ஏர் இந்தியா விமானிகளின் மொத்த ஊதியத்தில் 80% கொடுப்பனவுகள் (allowance).
அதனால் ஏர் இந்தியாவின் தற்போதைய சூழல் குறித்து விளக்கமாக கூறுவதற்கு அவசர சந்திப்புக்கு அழைக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உணவுத் தேடி சரணாலயத்திலிருந்து வெளிவந்த காண்டாமிருகங்கள்!