ETV Bharat / bharat

உள்நாட்டு கரோனா பரிசோதனை உபகரணங்கள்: வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ள ஐசிஎம்ஆர்

முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த, எளிய கரோனா பரிசோதனை உபகரணங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐ சி எம் ஆர்
ஐ சி எம் ஆர்
author img

By

Published : May 22, 2020, 4:57 PM IST

கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக இதுவரை, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பரிசோதனை உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. உலகம் முழுவதும் இந்த பரிசோதனை கருவிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது உள்நாட்டு பரிசோதனை உபகரணங்களை, இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான தலைமை அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆர்டி பிசிஆர் பரிசோதனை முறையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த உபகரணங்கள், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், மலிவான விலையில் அனைவருக்கும் எளிதில் சென்றடையக்கூடியதாகவும் இருக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தக் கருவிகள், ட்ரூ நெட் மெஷின், ஆர்என்ஏவைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம், ஆர்டி பிசிஆர் சிப்கள், சோதனை குச்சிகள் (swab), வைரல் லைசிஸ் மீடியம் ஆகிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

இந்தக் கருவியின் மூலம் 30 முதல் 50 நிமிடங்களில் ஒன்று முதல் நான்கு நபர்களை ஒரே சமயத்தில் பரிசோதிக்கலாம். மேலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 48 பரிசோதனைகள் வரை மேற்கொள்ளலாம்.

சர்வதேச கரோனா தொற்றுப் பரவலால் உலகம் முழுவதும் கரோனா பரிசோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த உள்நாட்டுப் பரிசோதனை உபகரணங்கள் நாடு முழுவதும் துரிதகதியில், காலம் தாழ்த்தாமல் பரிசோதனை மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காலநிலை மாற்றத்துக்கும் கரோனா பரவலுக்கும் சம்பந்தம் இல்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.