இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் பட்டய கணக்காளர் எனப்படும் சிஏ படிப்புக்கான தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தாண்டு கரோனா காரணமாக இத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
இந்தாண்டு சிஏ படிப்புகளுக்கான தேர்வு வரும் நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை, இடைநிலை, இறுதித் தேர்வு என அனைத்து தேர்வுகளும் இந்தத் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மணி நேரம் நடைபெறவுள்ள இத்தேர்வு, மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை ஐந்து மணி வரை நடைபெறும்.
இந்த தேர்வுக்கான அட்மிட் கார்டுகளை தேர்வு எழுதுபவர்கள் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் https://www.icai.org/ என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் அறிவிப்பு குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள கீழேவுள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்:
https://resource.cdn.icai.org/61590exam50116.pdf
இதையும் படிங்க: மாநில மொழிகளில் சுற்றுக்சூழல் தாக்க மதிப்பீடு வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு