ETV Bharat / bharat

'ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' குறித்து அறிவோம்!

author img

By

Published : Apr 12, 2020, 8:25 PM IST

ஹைதராபாத்: புதிய கரோனா வைரஸ் (கோவிட்-19) பரவல் காரணமாக பல உயிர்களை அமெரிக்கா இழந்து நிற்கிறது. ஒரு கட்டத்தில் செய்வதறியாமல் திகைத்த அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மிரட்டல், கெஞ்சல் என அந்நியன் போன்று மாறிமாறி பேசினார்.

Hydroxychloroquine: All we need to know  ஹைட்ராக்ஸி குளோரோகுயின்  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள்  அமெரிக்கா, தடுப்பு மருந்து, மலேரியா மருந்து, இந்தியா, கரோனா பாதிப்பு, கோவிட்-19 பாதிப்பு

உலக வல்லரசான அமெரிக்காவை கையேந்த வைத்த அருமருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் குறித்து அறிந்துகொள்வோம் வாருங்கள்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவது ஏன்.?

  1. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை ஒரு மலேரியா எதிர்ப்பு மருந்து. இது முடக்கு வாதம் மற்றும் லூபஸ் போன்ற நோய்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. ஜான் ஹாப்கின்ஸ் லூபஸ் மையம் இதை ஒரு வகையான 'லூபஸ் ஆயுள் காப்பீடு' என்று விவரித்துள்ளது. இது தினமும் ஆயிரக்கணக்கான இந்தியர்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
  2. ஹைட்ராக்ஸி குளோரோகுயினை (HCQ) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பு மருந்தாகப் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.
  3. கோவிட்-19 பெருந்தொற்று நோயை குணப்படுத்த ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொடுப்பதன் மூலம் சரியான தீர்வு கிடைக்கும் என்று உறுதியான ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை. ஆனால் முந்தைய தரவுகள், ஆய்வக முடிவுகள் மற்றும் உயிரியல் ஆய்வுகளின் அடிப்படையில் இதற்கு ஆதரவளிக்கப்படுகிறது.

வளர்ந்த நாடான அமெரிக்கா இந்தியாவிடம் (HCQ) ஏற்றுமதி செய்யச் சொல்வது ஏன்?

  1. அமெரிக்கா போன்ற நாடுகளில் மலோரியா பாதிப்பு இல்லாததால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) தயாரிக்கப்படுவதில்லை.
  2. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களான இப்கா மற்றும் சைடஸ் காடிலா ஆகியவற்றுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பழமையான 'இறக்குமதி தடையை' பகுதியளவு நீக்கியுள்ளது.

இந்தியாவில் HCQ உற்பத்தி

  1. இந்தியா உலகின் மிகப்பெரிய ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மாத்திரை உற்பத்தியாளர். உலகின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் விநியோகத்தில் 70 விழுக்காட்டை இந்தியா உற்பத்தி செய்கிறது.
  2. இப்கா ஆய்வகங்கள் (Ipca ), சைடஸ் காடிலா (Zydus Cadila) மற்றும் வாலஸ் பார்மாசூட்டிகல்ஸ் (Wallace Pharmaceuticals) ஆகியவை இந்தியாவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) உற்பத்தி செய்யும் முன்னணி மருந்து நிறுவனங்கள் ஆகும்.
  3. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை தயாரிக்கப் பயன்படும் சில மூலப்பொருள்கள் சீனாவிலிருந்து இதுவரை சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
  4. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 40 டன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) மாத்திரைகள் உற்பத்தி திறன் உள்ளது. இது தலா 200 மில்லி கிராம் அளவிலான 20 கோடி மாத்திரைகளை குறிக்கிறது.
  5. கோவிட்-19 பாதிப்பாளர் ஒவ்வொருக்கும் 14 ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் நிச்சயமாக தேவைப்படுகிறது. ஆகவே அமெரிக்க அரசாங்கம் கொள்முதல் செய்த 10 கோடி மாத்திரைகள் மூலம் 71 லட்சம் பேருக்கு சிகிச்சையளிக்க முடியும்.

மருந்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்

  1. கோவிட்-19 வைரஸூக்கு எதிராக இந்த மாத்திரை பயனுள்ளதாக இருக்கும் என்று சில அறிவிப்புகள் வந்தவுடன், மக்கள் அதை வாங்கவும் பதுக்கி வைக்கவும் தொடங்கிவிட்டனர். மருத்துவ ஆலோசனையின்றி எடுத்துக் கொண்டால், இந்த மாத்திரைகள் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. ஆகவே இம்மருந்தை மக்கள் பதுக்கி வைப்பதை தடுக்க அரசு முயற்சித்து வருகிறது.
  2. அதிக அளவுகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்தப்படும்போது, திடீர் காய்ச்சல், சீரம் நொதி உயர்வதுடன் கடுமையான கல்லீரல் பிரச்னையையும் ஏற்படுத்தும். அதிகப்படியான மருந்தை உட்கொள்ளும்போது நோயாளிகளுக்கு தலைவலி, மயக்கம், பார்வைக் கோளாறு, இருதயக் கோளாறு, வலிப்பு, ஹைபோகாலேமியா, படப்படப்பு, இதரக் கோளாறுகள், டார்சேட்ஸ் டி பாயிண்ட்ஸ், வென்ட்ரிக்குலர் டாக்ரிக்கார்டியா மற்றும் வென்ட்ரிக்குலர் ஃபைப்ரிலேஷன் உள்ளிட்டவைகள் ஏற்படக்கூடும். இது திடீர் சுவாசக் கோளாறு மற்றும் இதயத் தடுப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.
  3. அதிகப்படியான அளவு இதனை எடுத்துக்கொண்டால் 30 நிமிடங்களுக்குள் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: பூட்டுதலின் போது மனநலப் பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்வது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.