ஊரடங்கைத் தொடர்ந்து சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் கொடுக்க சுற்றுலா, போக்குவரத்துத் துறையினருடன் எடியூரப்பா நேற்று (ஜூன் 6) பேசினார். மேலும், மத்திய அரசு வழிகாட்டியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தங்கும் விடுதிகள், உணவகங்கள், பேருந்து உரிமையாளர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்போம் என உறுதியளித்ததோடு சில கோரிக்கைகளையும் வைத்தனர்.
கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்த எடியூரப்பா, ஜூன் 8ஆம் தேதி முதல் தங்கும் விடுதிகள், உணவகங்கள் இயங்க அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள், சுற்றுலாத் தலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்த கையேட்டையும் அவர் வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் கர்நாடக துணை முதலமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.