கரோனா தடுப்பு நடவடிக்கைக்காகப் பல்வேறு தரப்பினர் பிரதமர் நிவாரண தொகையில் நிதி செலுத்தியுள்ளனர். இந்தத் தொகையிலிருந்து 3,100 கோடி ரூபாய் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதில், 2,000 கோடி ரூபாய் வென்ட்டிலேட்டர்கள் வாங்குவதற்காகவும் 1,000 கோடி ரூபாய் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, மத்திய அரசின் திட்டங்கள் கடைநிலை வரை சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்ய நேர்மையான அவசர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் அறிவிக்கப்பட்ட 1000 கோடி ரூபாய் நிதியை, பெரும் பாதிப்படைந்த உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு நேரடியாக வழங்க வேண்டும்.
அது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். ஏழைத் தொழிலாளர்கள் மேலும் சிரமத்துக்கு உள்ளாக மாட்டார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பிடியிலிருந்து விடுவிக்குமா எறும்புதின்னிகள்?