ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திலுள்ள பெய்க்போரா கிராமத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர் ரியாஸ் நாய்கோ கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டார். ரியாஸ் சுட்டுகொல்லப்பட்டதற்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. அதன் பிறகு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் அடுத்த தலைவராக காசி ஹைதரை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் ராணுவத்தினரை குறி வைத்து தாக்குதல் நடத்த ஜெயிஷ்-இ-முகமது இயக்கம் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறிப்பாக புல்வாமா தாக்குதலைப்போல ஒரு தாக்குதலை நடத்தவும், இதற்காக உள்ளூர் மக்களை பயன்படுத்தி ஆங்காங்கே ராணுவ முகாம்களில் குண்டுகளை வெடிக்கச் செய்யவும் அந்த அமைப்பு திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறைக்கு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காஷ்மீர் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’ரியாஸ் நாய்கோ சுட்டுக்கொல்லப்பட்டது மிகப் பெரிய வெற்றி’