இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மத்திய வங்கக் கடல் மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
அதனால், வடகிழக்கு மாநிலங்களான ஒடிசா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, ஒடிசாவின் வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல மேற்கு வங்கம், வங்கதேசம், சாகர் தீவுகள் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். எனவே, அப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு