ஹரியானா மாநிலம் கைத்தால் மாவட்டத்தில் சாலையோர கழிவுநீர் கால்வாய் ஒன்றில் பச்சிளம் குழந்தை ஒன்று சிக்கி தவித்தது. இதனையடுத்து தெரு நாய் அந்த பச்சிளம் குழந்தையை கழிவுநீர் கால்வாயிலிருந்து வெளியே இழுத்து வந்தது.
இதனை சிசிடிவியில் கண்ட காவல் துறையினர் அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், குழந்தையை கால்வாயில் தூக்கி வீசிய பெண் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடி வருவதாக கூறியுள்ளனர்.
குழந்தையின் நிலைமை குறித்து மருத்துவர் தினேஷ் கூறுகையில், "குழந்தையை காலை 6 மணி அளவில் மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டுவந்தனர். அப்போது அதன் எடை 1.15 கிலோவாக இருந்தது. தலைப்பகுதியில் சிறிது காயம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.