ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் ஃபால்னா பகுதியை சேர்ந்த கன் சிங் ராவண ராஜ்புத், ரயில்வே ஏஜென்டாக உள்ளார். இந்நிலையில், ராஜ்புத் தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் அவ்வழியே வந்த கன் மேன் ஒருவர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். இச்சம்பவம் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடைபெற்று இருக்கலாம் எனக் கருதுகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.