குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுமி தேவனா டேவ், சிறுவயதிலிருந்தே தனது தலைமுடியை வெட்டாமல் மிக நிளமாக வளர்த்துவந்துள்ளார்.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது முடியை இழந்து வருந்துவதைக் கண்ட தேவனா, தனது முடியை அவர்களுக்கு நன்கொடையாக கொடுக்க முடிவு செய்துள்ளார்.
இதனால், தான் சிறு வயதிலிருந்தே ஆசையாக வளர்த்த 30 அங்குல நீள முடியை நன்கொடையாக அளித்துள்ளார். இதன்மூலம் குஜராத்தில் உள்ள மற்ற பெண்களும் முடியை நன்கொடை வழங்க முதற்படியை தேவனா எடுத்து வைத்துள்ளார் என்றால் மிகையில்லை.
இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய தேவனா, “புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முடியை இழந்த பெண்களுக்கு தலைமுடியை கொடுத்து நம்பிக்கை அளிக்க முடிவு செய்தேன்” என்றார்.
பின்னர் பேசிய அவரது தாயார் நிகிதா டேவ், தேவனா தலைமுடியை நன்கொடை செய்கிறார் என்பதை அறிந்தபோது ஆச்சரியமடைந்ததாகவும், முடியை கொடுக்க வேண்டாம் என்று தடுத்தும் பிடிவாதமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க...’ரோஜா’ தொடர் நடிகருக்கு அடித்த செம லக்!