ஜோசப் மார் தோமாவின் 90ஆவது பிறந்தநாள் விழா கேரளாவிலுள்ள தோமா தேவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய அவர், மத்திய அரசு சாதி, மதம், இனம், மொழி, பாலினம் ஆகியவற்றின் பெயரில் பாகுபாடு காட்டவில்லை. மத்திய அரசுக்கு வழிகாட்டும் ஒளியாக அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது.
மார் தோமா தேவாலயம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டின் முன்னணி களச் செயல்பாடுகளுக்காக இந்தத் தேவாலயம் பங்காற்றியது. அவசர நிலையைக் கூட தோமா தேவாலயம் எதிர்த்தது. இந்தத் தேவாலயம் இந்தியக் கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது.
கோவிட்-19 பரவலை எதிர்த்து வெற்றிகரமான போராட்டத்தை இந்தியா செய்துவருகிறது. இந்தியாவில் கரோனா இறப்பு விகிதம் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவே உள்ளது. வணிகம், வியாபாரம் ஆகியவை தொடங்கிய பின்பும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். தற்சார்பு இந்தியா ஒவ்வொரு இந்தியரையும் செழிப்பாக்கும். இத்திட்டத்தின் கீழ் 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'காஷ்மீர் மக்களின் தூதுவராக மாறப்போகிறேன்'- இம்ரான் கான்