ETV Bharat / bharat

சீனாவின் பெயர் பலகையைக்கூட எடுக்க முடியாது: மத்திய அரசை சாடும் முப்தி - பிடிபி Vs பாஜக

ஸ்ரீநகர் : காஷ்மீரில் படை பலத்தைக் காட்டும் மத்திய அரசால் இந்திய எல்லையில் பதிக்கப்பட்டுள்ள சீனாவின் பெயர் பலகையைக்கூட எடுக்க முடியாத என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், பிடிபி தலைவருமான மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.

" உங்கள் பலத்தை சீனாவிடம் காட்டுங்கள்" - மத்திய அரசுக்கு முப்தி சவால் !

author img

By

Published : Oct 29, 2020, 5:58 PM IST

புதிய நிலச் சட்டத்திற்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்துவரும் ஜம்மு-காஷ்மீர் பிடிபி மூத்த தலைவர் குர்ஷித் ஆலம் உட்பட பல தலைவர்களை காஷ்மீர் நிர்வாகம் தடுத்து நேற்று தடுத்து வைத்துள்ளது. அத்துடன் அக்கட்சியின் ஸ்ரீநகர் அலுவலகமும் யூனியன் பிரதேச நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மெஹபூபா முப்தி, " பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் இந்திய எல்லையிலிருந்து சீனாவை வெளியேற்ற முடியாது.

அவர்களால் காஷ்மீர் நிலத்தை எங்களிடமிருந்து பறித்து அதை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்படைக்க மட்டுமே முடியும்

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஒரே நோக்கம் காஷ்மீரை கொள்ளையடிப்பது மட்டுமே. அவர்கள் இங்கு யாரையும் பேச அனுமதிக்கவில்லை. அவர்களின் நோக்கங்கள் வகுப்புவாதமானவை. அவர்களது நடவடிக்கையை பார்த்து, லடாக் மக்கள்கூட இப்போது மனம் திரும்புகிறார்கள்

பாஜகவால் ஏழைகளுக்கான உணவைக்கூட உறுதிப்படுத்த முடியவில்லை. அவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் உணவுப்பொருள்கள் குறித்து கேட்கும்போது எங்களது சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது

அவர்கள் ஜம்மு-காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்றும் மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள். யார் இங்கே நிலம் வாங்க முடியும் ? முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள்தானே இங்கு நிலம் வாங்க முடியும். அவர்கள் ஜம்மு-காஷ்மீரை மிகப் பெரிய சிறைச்சாலையாக மாற்றியுள்ளனர்.

இந்திய ராணுவ வீரர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்திய சீனாவின் பெயரைக்கூட மத்திய அரசால் குறிப்பிட முடியாது. இந்திய எல்லையில் சீனாவால் வைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகையைக்கூட மத்திய அரசால் எடுக்க முடியாது. மத்திய அரசின் இத்தகைய செயல்பாடுகள்தான் கிழக்கு லடாக்கின் கால்வான் பகுதியில் இந்திய படையினர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது.

நாங்கள் ட்விட்டர் அரசியல்வாதிகள் அல்ல. களத்தில் நிற்பவர்கள். ஒவ்வொரு நாளும் புதுடெல்லியில் இருந்து நீங்கள் வெளியிடும் புதிய கட்டளைகளால் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. நீங்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருந்தால், சீனாவை இந்திய நிலத்திலிருந்து வெளியேற்றுங்களேன் பார்ப்போம்.

ஜம்மு-காஷ்மீரை சூறையாடுவதற்கான உங்கள் திட்டங்களை நாங்கள் வெற்றிபெறவிடமாட்டோம். இங்கு நடைபெறும் அனைத்தும் சட்டவிரோதமாகவே உள்ளது. பாஜக அவர்களைப் பொருட்படுத்தாது என்பதை மக்கள் உணர்ந்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பாஜக அரசு எங்கள் நிலத்தை எங்களிடமிருந்து அபகரித்துக்கொண்டு அவற்றை கார்ப்பரேட்டுகள் மற்றும் தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க விரும்புவதை ஜம்மு பிராந்தியத்தைச் சேர்ந்த லடாக்கிகள் மற்றும் டோக்ரா மக்கள்கூட நன்கு உணர்ந்திருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.