மத்திய நகர்ப்புற மற்றும் விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், "ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கப்படுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. குறைந்த நேரத்தில் நல்ல ஒப்பந்தத்தின் மூலம் விற்கப்பட வேண்டும்.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதில் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டிவருகின்றன. ஏர் இந்தியா நிறுவனம் விற்கபடுவதற்கு ஏதுவாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் அதிகமானதால், மத்திய அரசு ஆகஸ்ட் 3ஆம் சட்ட மசோதாவை நிறைவேற்றி நாட்டின் முக்கிய விமான நிலையங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க தீர்மானித்தது குறிப்பிடத்தக்கது.