உலகின் இரண்டாவது பணக்கார கோயில் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில். இந்தக் கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்துவருகிறது. இதன் கருவூலத்திலிருந்து 5 கிலோ மதிப்புள்ள வெள்ளி கிரீடமும், இரண்டு தங்க மோதிரங்களும் திருடுபோயின.
இதனைத் தொடர்ந்து, கோயில் உதவி நிர்வாக அலுவலரான ஸ்ரீநிவாசலுவின் கவனக்குறைவால்தான் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், திருடுபோன ஆபரணங்களின் மதிப்புள்ள பணத்தை ஸ்ரீநிவாசலுவின் ஊதியத்திலிருந்து கோயில் நிர்வாகம் கழித்தது. திருட்டு குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கவில்லை. இதனால் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தக் கோயிலில் விற்கப்படும் டோக்கன்களில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்தத் திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.