ETV Bharat / bharat

கோவா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! - கோவா

பனாஜி: கோவா சட்டப்பேரவையில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தனது பெரும்பான்மையை நிரூப்பிப்பதற்கான சிறப்பு கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது.

GOA
author img

By

Published : Mar 20, 2019, 8:42 AM IST

கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் புற்றுநோய் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், நேற்று அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோவா பாஜகவைச் சேர்ந்த பிரமோத் சாவந்த் புதிய முதலமைச்சராக நேற்று மதியம் பதவியேற்றுக் கொண்டார்.

அவருடன் கூட்டணிக் கட்சியான கோவா முன்னணியைச் சேர்ந்த விஜய் சர்தேசாயும், மஹாராஷ்டிரவாடி கோமன்டக் கட்சி எம்எல்ஏ சுதின் தாவலிக்கார் ஆகியோரும் துணை முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் நாளை அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் மிருதுளா சின்ஹா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அனுமதியளித்தார். இதனையடுத்து, இன்று காலை சுமார் 11 மணிக்கு முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

Intro:Body:

news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.