ETV Bharat / bharat

தென்கொரியாவில் குறைந்துவரும் கரோனா பாதிப்பு! - கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை

ஹைதராபாத்: வேகமாகப் பரவிவரும் கரோனா தொற்றுக்கு இதுவரை உலகளவில் ஒரு கோடிக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தென்கொரியா நாட்டில் கரோனா பரவல் குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

global-covid-19-tracker
global-covid-19-tracker
author img

By

Published : Jun 29, 2020, 10:40 AM IST

உலகெங்கிலும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று ஒரு கோடியை இரண்டு லட்சத்து 48 ஆயிரத்து 232 கோடியை எட்டியுள்ளது. ஐந்து லட்சத்து நான்காயிரத்து 462 பேர் இத்தீநுண்மியால் இறந்துள்ளனர். 55 லட்சத்து 56 ஆயிரத்து 439 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனாவைக் கட்டுப்படுத்த மருந்து எதுவும் கண்டுபிடிக்காததால் இந்தத் தீநுண்மி பரவல் இரண்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் பிப்ரவரி பிற்பகுதியிலும் மார்ச் மாத தொடக்கத்திலும் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான கரோனா பதிவாகிவந்தன. ஆனால் தற்போது 40 முதல் 42 மட்டுமே பதிவாகிவருகின்றன.

இது தொடர்பாக அந்நாட்டு அரசு தெரிவிக்கையில், தகுந்த இடைவெளியை நாங்கள் அதிகமாகப் கடைப்பிடிப்பதால் கரோனா பரவல் அதிகம் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

வரப்போகும் நாள்களில் இந்த தகுந்த இடைவெளியை நாங்கள் இன்னும் அதிகரிக்க உள்ளோம். ஒரு இடத்தில 10 பேர்களுக்கு மேல் கூட கூடாது எனவும் பள்ளி, கல்லூரிகள் நீண்ட நாள்களுக்கு மூடப்பட உள்ளதாகவும் தென் கொரியா அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'கடல்வாழ் உயிரினங்கள் குறித்து கவனம் தேவை'- மத்திய அரசுக்கு ஜெய்ராம் ரமேஷ் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.