கரோனா தீநுண்மி பாதிப்பும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் புதுப்புது உச்சங்களை எட்டிவருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கரோனா தீநுண்மி தொற்றால் 99 லட்சத்து ஆறாயிரத்து 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 96 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது. 53 லட்சத்து 57 ஆயிரத்து 996 பேர் இந்தத் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதால் தொற்று மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களில் ஐந்து முதல் பத்து விழுக்காட்டினருக்குத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆஸ்திரேலிய சுகாதார அலுவலர்கள் கூறுகின்றனர்.
மேலும் தென் அமெரிக்கா, இந்தோனேசியாவிலிருந்து நூற்றுக்கணக்கானோர் ஆஸ்திரேலிய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்பு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மோடி பிரதமரான பின்பு இருதரப்பு உறவுகள் மோசமடைந்தது ஏன்? அசோக் கெலாட் கேள்வி