ETV Bharat / bharat

வைஷ்ணவ ஜனதோ காந்தியின் கீதமான கதை! - காந்தி 150

மற்றவர்களின் வலியை தன் வலியாக உணர்ந்து, ஆதரவற்றவர்களுக்கு அகந்தையில்லாமல் உதவுபவனே வைணவன் என்ற அர்த்தம் கொண்ட பாடல்தான் காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடலாம்.

Gandhi
author img

By

Published : Oct 2, 2019, 3:23 PM IST

உலகை தன் அகிம்சை கொள்கைகளால் திரும்பி பார்க்க வைத்தவர் அண்ணல் காந்தி அடிகள். தன் வாழ்வை சோதனை களமாக்கிய அவர் ரத்தமில்லாத போரை வாழ்க்கை முழுவதும் நடத்தினார். உலகமே வன்முறையின் மேல் நம்பிக்கை வைத்து போரில் ஈடுபட்டு கொண்டிருந்த நேரத்தில், சத்தியாகிரகம் மூலம் தன் நாட்டின் சுதந்திரத்தை அடைய செய்த காந்தியின் வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்திருந்தாலும் அந்த ஒரு நிகழ்வு அவர் வாழ்க்கையை திருப்பிபோட்டது.

ஆங்கிலேயர்கள் பார்த்து நடுங்கிய அண்ணல் சிறு வயதில் இருட்டை பார்த்து அச்சம் அடைந்துள்ளார். பாரம்பரியமான வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த காந்திக்கு ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாச கதைகளை அவரின் வீட்டில் வேலை செய்யும் ரம்பா கூறியுள்ளார். ராம நாமத்தின் முக்கியத்துவத்தைக் கூறி, வாழ்க்கையின் இறுதிவரை அதனை உச்சரிக்கும்படி அவர் ஆலோசனை கூறியுள்ளார். அப்போதுதான், 400 ஆண்டுகளுக்கு முன்பு நரசிங் மேத்தா என்பவர் இயற்றிய வைஷ்ணவ ஜன பாடலை கேட்க ஆரம்பித்தார். சிறுவயதில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இந்த பாடலை பாடிவிட்டு உறங்குவது அவருக்கு வழக்கமாக இருந்தது. இங்கிலாந்தில் கல்வி கற்க சென்றபோதும், தென்னாப்பிரிக்காவில் சட்டம் பயில பயணம் மேற்கொண்டபோதும் கூட இந்த பழக்கத்தை அவர் தொடர்ந்தார்.

பின்னர், நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக ஈடுபட்டபோது, தான் ஆரம்பித்த சபர்மதி ஆசிரமத்தில் இந்த பாடலை தினமும் பாட தன்னை பின்தொடர்பவர்களை அண்ணல் பணித்தார். 1920ஆம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்தின் பாடகர்கள் இந்த பாடலுக்கு இசையமைத்தனர். காந்தியை கவர்ந்த வைஷ்ணவ ஜன பாடல் இன்றுவரை அந்த ஆசிரமத்தில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் இசைக்கப்பட்டுவருகிறது.

வைஷ்ணவ் ஜன் தோ தேனே கஹியே
ஜே பீர் பராயீ ஜானே ரே
பர் தீக் கே உபகார் கரே தோயே
மன் அபிமான் நா ஆனே ரே

வைஷ்ணவ் ஜன் தோ தேனே கஹியே
சகல் லோக் மா ஸஹுநெ வந் தெ
நீ ந் தா ந கரே கீ னீ ரே
வாச் காச் மா நிச் சல் ராகே
தன் தன ஜனனீ தேனீ ரே

வைஷ் ணவ் ஜன் தோ தேனே கஹியே
சம் த்ரிஷ் டர த்ரீ ஷணா த்யாகே
பர் ஸ்த்ரீ ஜேனே மாத் ரே
ஜிஹ்வா தாகீ அசதீ நஹி ஜேநே
த்ரீட் வைராகி ஜேனா மன மா ரே

வைஷ் ணவ் ஜன் தோ தேனே கஹியே
மோஹ் மாயா வ்யாபே நஹி ஜேநே
த்ரீட் வைராகி ஜேனா மன் மா ரே
ராம் நாம் ஸுதாலி லாகி
சகல் தீ ரத் தேனா தன் மா ரே

வைஷ் ணவ் ஜன் தோ தேனே கஹியே
வண் லோபீ நே கபட் ரஹித் சே
காம் க்ரோத நிவார் யா ரே
பணே நரஸய் யோ தேனீன் தர் ஷன் கர்தா
கீல் எகோத் தேர் தாரயோ ரே

நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளையின் தமிழ் மொழிபெயர்ப்பு

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பீன்
வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்)
பிறருடைய துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;

உறுதுயர் தீர்த்ததில் கர்வங்க கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும்;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குவன் உடல்மனம் சொல் இவற்றால்

அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்
அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள் (வைஷ்)
விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள் விட்டவனாய்

ஒருப்புடன் அந்நிய மாதரைத் தாயென
உணர்வோம் வைஷ்ணவன் தன்நாவால்
உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோதும் அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்

வரைப்புற குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம் (வைஷ்)
மாயையும் மோகமும் அணுகாதவனாய்
மனதினில் திடமுள்ள வைராக்யன்

நாயக னாகிய ஸ்ரீராமன் திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்
பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்

ஆயன யாவையும் அடங்கிய சேக்ஷத்திரம்
ஆகும் அவனே வைஷ்ணவனாம் (வைஷ்)
கபடமும் லோபமும் இல்லாதவனாய்
காம க்ரோதம் களைந்தவனாய்த்

தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத் தரிசிப்பவரின் சந்ததிகள்
சுபமடை வார்கள் எழுபத்தோராம் தலைமுறை வரையில் சுகமுறுவர்
அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரைசேர்வார்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.