நெஃப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) ஆகியவை விரைவு பணப் பரிவர்த்தனை செய்யும் முறைகளாகும். இரண்டு லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையை பரிமாற்றம் செய்ய ஆர்டிஜிஎஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. ரூ. 50 ஆயிரத்துக்கும் குறைவான பணத்தை நெஃப்ட் மூலம் பரிமாற்றம் செய்யலாம்.
நெஃப்ட் பரிவர்த்தனைக்கு ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரையும், ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைக்கு ஐந்து ரூபாய் முதல் 50 ரூபாய் வரையும் வங்கிக் கட்டணம் வசூலித்து வந்தன.
இந்நிலையில், கடந்த மாதம் 6ஆம் தேதி நிதிக்கொள்கை சீர்திருத்தத்தைச் சமர்ப்பித்த ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் நோக்கில், நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் பிரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவித்திருந்தது.
இந்த கட்டண ரத்தானது இன்று (1 ஜூலை, 2019) முதல் அமலுக்கு வருகிறது.