இந்திய சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு படையினர் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு நடத்தப்பட்ட என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதேபோல், புல்வாமாவில் நடைபெற்ற என்கவுன்டர் சம்வபத்தில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.
கடைசி 12 மணி நேரத்தில், தெற்கு காஷ்மீரில் மட்டும் இரண்டு என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.