முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுவருகிறது. காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் சோனியா காந்தி, மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராபர்ட் வதோரா உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.